“10 நிமிடங்களில் ஈரான் காலி” டொனால்டு டிரம்ப் விடுத்த அதிரடி உலகப் போர் எச்சரிக்கை.. பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“10 நிமிடங்களில் ஈரான் காலி” டொனால்டு டிரம்ப் விடுத்த அதிரடி உலகப் போர் எச்சரிக்கை.. பெரும் பரபரப்பு..!!

Published

on

ஈரானின் அணுசக்தி தளங்களை அமெரிக்காவால் வெறும் 10 நிமிடங்களில் முற்றிலும் அழிக்க முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக எச்சரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ள டிரம்ப், அந்நாட்டின் அணுசக்தி திறன்கள் ஏற்கனவே பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது ஒன்று அல்லது இரண்டு தளங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் போர் தாக்குதலைத் தொடங்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கினால் அதற்கு மிகக் கடுமையான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஈரானின் இந்த மிரட்டலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அதிபர் டிரம்ப் தற்போது இந்த 10 நிமிட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Advertisement

நிலத்தடியில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் ஈரானின் புகழ்பெற்ற ‘பிக்ஆக்ஸ் மவுண்டன்’ அணுசக்தி வளாகத்தை தங்களால் மிக விரைவாக அழிக்க முடியும் என்று டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரான் தற்போது அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகவும், பேச்சுவார்த்தைகள் நன்றாக நடந்தாலும், அவர்கள் ஒப்பந்தங்களைச் செய்துவிட்டுப் பின்வாங்குவதால் அவர்களை முழுமையாக நம்ப முடியாது என்றும் டிரம்ப் தனது பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in