“இடைத்தேர்தல் தோல்விக்கு யார் பொறுப்பு..?” மாவட்ட செயலாளர்களைக் கூட்டி எடப்பாடி பழனிசாமி போட்ட மாஸ்டர் பிளான்.. பரபரக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இடைத்தேர்தல் தோல்விக்கு யார் பொறுப்பு..?” மாவட்ட செயலாளர்களைக் கூட்டி எடப்பாடி பழனிசாமி போட்ட மாஸ்டர் பிளான்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

Published

on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, சமீபத்தில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுக சந்தித்த தோல்விகள் குறித்தும், அடுத்ததாக தமிழகத்தில் வரவிருக்கும் 5 தொகுதிகளின் இடைத்தேர்தல்களை எதிர்கொள்வதற்கான புதிய உத்திகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

அதிமுகவின் அமைப்பு ரீதியாக உள்ள 84 மாவட்ட செயலாளர்கள் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இருப்பினும், கட்சியின் மிக முக்கிய மற்றும் மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படும் ஒரு முக்கியக் கூட்டத்தை மூத்த தலைவர்கள் புறக்கணித்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in