LATEST NEWS
“விஜய்க்கு ஒண்ணுமே தெரியாது… அவருக்கு மேல் 3 CM-க்கள் இருக்காங்க..!” EPS உடைத்த தவெக ரகசியம்.. பரபரக்கும் அரசியல் களம்..!!
செங்கல்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக தலைவர் விஜய்க்கு மேல் மூன்று முதலமைச்சர்கள் இருப்பதாக அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் பின்னணியில் இருந்து செயல்படும் மூன்று தேர்தல் வியூக வகுப்பாளர்கள் தான் உண்மையில் தமிழ்நாட்டை மறைமுகமாக ஆட்சி செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய்க்கு அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து ஒன்றுமே தெரியாது என்றும், அவர் வெறும் முகமாக மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார் என்றும் இபிஎஸ் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
தவெகவின் இந்த மூன்று தேர்தல் வியூக வகுப்பாளர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகப் பொறுப்புகள் குறித்தான முடிவுகளை விஜய் எடுக்கிறார் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் தலையெழுத்தையே அந்த மூன்று நபர்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், இப்படிப்பட்ட நிர்வாகக் கட்டமைப்பு இருந்தால் நாடு எப்படி உருப்படும்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக தலைவர் விஜயை இலக்கு வைத்து இபிஎஸ் பேசியுள்ள இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
