மறுமணம் செய்த 11 நாட்களில் என்ன நடந்தது..? 2 குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய பெண்… விபத்தில் இறந்த முதல் கணவன்… திடுக்கிடும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

மறுமணம் செய்த 11 நாட்களில் என்ன நடந்தது..? 2 குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய பெண்… விபத்தில் இறந்த முதல் கணவன்… திடுக்கிடும் சம்பவம்..!!

Published

on

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா பகுதியைச் சேர்ந்த ஜிஷா (32) என்ற பெண், தனது இரண்டாவது திருமணம் நடந்த 11 நாட்களிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நண்பகல் 12 மணியளவில் வர்க்கலா சிலம்பில் உள்ள இவரது கணவர் அஜின் நடேசனின் வீட்டில் ஜிஷா தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். உடனடியாக வர்க்கலாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

ஜிஷாவிற்கு இது இரண்டாவது திருமணமாகும். இவரது முதல் கணவர் சரத், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். முதல் கணவர் மூலமாக ஜிஷாவிற்கு 8 மற்றும் 5 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதல் கணவரின் மறைவுக்குப் பிறகு, கடந்த அக்டோபர் 21-ஆம் தேதிதான் அஜின் நடேசனுடன் ஜிஷாவிற்கு முறைப்படி இரண்டாவது திருமணம் நடந்து முடிந்தது.

Advertisement

திருமணமான சில நாட்களிலேயே இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டதற்கான காரணம் குறித்து வர்க்கலா காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலை ஜிஷா தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசியபோது எந்தப் பிரச்சினையும் இல்லை என்று உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தற்கொலைக்கான பின்னணி மற்றும் ஏதேனும் குடும்பத் தகராறு காரணமா என்ற கோணங்களில் விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in