LATEST NEWS
“CM விஜய் அறிவிக்கல… ஆனா வேட்பாளர் நான்தான்..!” அம்பாசமுத்திரத்தில் தவெக இசக்கி சுப்பையா செய்த அதிரடி காரியம்.. தவெக-வில் வெடித்த அரசியல் ஆட்டம்..!!
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, தமிழக வெற்றிக் கழகத்தின் இசக்கி சுப்பையா தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளார். முன்னதாக, கட்சியின் தலைமை முறைப்படி அறிவித்த பின்னரே தான் வேட்பாளராகக் களம் இறங்குவேன் என்று அவர் கூறிவந்தார். ஆனால், அதற்கு மாறாக தற்போது அம்பாசமுத்திரம் தொகுதி முழுவதும் நேரடியாகக் களத்தில் இறங்கி, மக்களிடம் தீவிரமாக ஆதரவு திரட்டும் பணிகளில் அவர் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, ஒரு குறிப்பிட்ட ஜெபக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, அவர்தான் அம்பை தொகுதியின் அதிகாரப்பூர்வ தவெக வேட்பாளர் என்ற அறிவிப்பு பகிரங்கமாக வெளியிடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு நில்லாமல், தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அந்தக் கூட்டத்தில் சிறப்புப் பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டன. கட்சித் தலைமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே, தவெக சார்பில் இசக்கி சுப்பையா பிரசாரத்தைத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
