“ஆதாரம் இருக்கா?” என்னையும் மாஜி அமைச்சர் நேருவையும் லிங்க் பண்ணது யார்..? பொறுமையிழந்து கொந்தளித்த நடிகை ஷபானா.. இணையத்தை அதிரவைக்கும் அறிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஆதாரம் இருக்கா?” என்னையும் மாஜி அமைச்சர் நேருவையும் லிங்க் பண்ணது யார்..? பொறுமையிழந்து கொந்தளித்த நடிகை ஷபானா.. இணையத்தை அதிரவைக்கும் அறிக்கை..!!

Published

on

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில் தனக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு, பிரபல சின்னத்திரை நடிகை ஷபானா கடுமையான முறையில் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் தனது பெயரைத் தேவையின்றி இணைத்துப் பேசுபவர்களுக்குச் சவால் விடுத்துள்ள அவர், இந்த ஊழல் வழக்கில் தனக்குத் தொடர்பு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கான முறையான ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா என்று கொந்தளிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விவகாரம் குறித்துப் பலரும் தன்னிடம் விளக்கமளிக்குமாறு கேட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். “முதலில் இந்தச் சர்ச்சையில் என் பெயரை இழுத்து விட்டது யார்? தவறு செய்யாத நான் ஏன் இதற்கு விளக்கமளிக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ள ஷபானா, தன்னைச் பொதுவெளியில் இழிவுபடுத்தும் நோக்கில் திட்டமிட்டுப் பழிசுமத்தியவர்கள் தான் இதற்கு முதலில் விளக்கமளிக்க வேண்டும் எனத் தனது அறிக்கையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in