இனிமே மெடிக்கல் கியூல வெயிட் பண்ண வேண்டாம்..! அரசு மருத்துவமனைகளுக்கு வரப்போகும் ‘நலம் ஏ.ஐ’ செயலி..! அமைச்சர் வெளியிட்ட அதிரடி செய்தி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இனிமே மெடிக்கல் கியூல வெயிட் பண்ண வேண்டாம்..! அரசு மருத்துவமனைகளுக்கு வரப்போகும் ‘நலம் ஏ.ஐ’ செயலி..! அமைச்சர் வெளியிட்ட அதிரடி செய்தி..!!

Published

on

முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும் நலம் ஏ.ஐ. செயலியில் மருந்து, மாத்திரைகள் வாங்க முன்பதிவு செய்யலாம் என அமைச்சர் அருண்ராஜ் பேட்டி அளித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான உணவு வீதி என்ற திட்டத்தை முதலில் திருச்சியில் தொடங்கி வைக்க செல்கிறேன். தற்போது டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுக்குள் உள்ளது. இதற்கான போதுமான கொசு ஒழிப்பு மற்றும் கொசு உற்பத்தியாகும் புழுக்களை அழிக்கும் பணியில் பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன, மருத்துவர்களுக்கும் போதிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை நோய்களுக்கு சிகிச்சை பெற வருபவர்கள் மற்றும் நோயாளிகள் மருந்து-மாத்திரைகள் வாங்குவதற்கு காலையில் இருந்து மதியம் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், இதனை சரி செய்ய ‘நலம் ஏ.ஐ.’ என்ற வாட்ஸ்அப் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பின்னர், மருந்து-மாத்திரைகள் வாங்குபவர்கள் அதில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலை மற்றும் நீண்ட நேரம் காத்திருப்பதை முற்றிலுமாக தவிர்க்க முடியும். மேலும், தாம்பரம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவது குறித்து முதலமைச்சரிடம் பேசி உரிய முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in