CRIME
“நண்பனா…? யமனா..?” ஒரே ஒரு மொபைல் போன்… நண்பனையே செங்கலால் அடித்துக் கொன்ற கொடூரம்.. பின்னணியில் இருந்த அதிர்ச்சி உண்மை..!!
பஞ்சாப் மாநிலம் கண்ணா பகுதியில் மொபைல் போனுக்கான பேராசையால், தனது நண்பரையே செங்கலால் அடித்துக் கொன்ற வாலிபர் ஒருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்த ஹர்மன் மற்றும் 22 வயதான சச்சின் பஸ்வான் ஆகிய இருவருக்கு இடையே மொபைல் போன் தொடர்பாக கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது, ஆத்திரமடைந்த ஹர்மன் சச்சினை செங்கலால் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலைக்குப் பிறகு சச்சினின் மொபைல் போன் மற்றும் பணப்பையைப் பறித்துக்கொண்டு ஹர்மன் தப்பியோடிவிட்டார். ஆரம்பத்தில் இந்த மரணம் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்பட்டது என்று கருதப்பட்டாலும், உடற்கூறாய்வு மற்றும் போலீஸ் விசாரணையில் இது திட்டமிட்ட கொலை என்பது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து, பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கண்ணா நகரப் போலீஸார், நேற்று குற்றவாளியான ஹர்மனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
