நள்ளிரவில் மனைவியை அடித்துக் கொன்று சுடுகாட்டில் எரித்த கணவன்.. உடந்தையாக இருந்த மாமனார்.. தடையங்கள் அழிப்பு.. விசாரணையில் அம்பலமான கொடூரக் கொலை..!! – cinefeeds
Connect with us

CRIME

நள்ளிரவில் மனைவியை அடித்துக் கொன்று சுடுகாட்டில் எரித்த கணவன்.. உடந்தையாக இருந்த மாமனார்.. தடையங்கள் அழிப்பு.. விசாரணையில் அம்பலமான கொடூரக் கொலை..!!

Published

on

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, மாமனாரின் உதவியுடன் சுடுகாட்டில் உடலை ரகசியமாக எரித்து தடயங்களை மறைக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மீதிகுடி கிழக்குத் தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும், அவரது மனைவி சிவகாமிக்கும் இடையே கடந்த அக்டோபர் 30 அன்று கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் சிவகாமியைத் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலையை மறைப்பதற்காக ரவிச்சந்திரன், தனது தந்தையான விறகுக் கடை உரிமையாளர் யாகப்பனின் உதவியை நாடியுள்ளார். சிவகாமியின் உடலை ஒரு வாகனத்தில் ஏற்றி, கிராமத்துச் சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் எரித்துவிட்டு இருவரும் தப்பியோடியுள்ளனர். இது குறித்து சுடுகாட்டுப் பணியாளர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கணவனும் மாமனாரும் சேர்ந்து உடலை எரிக்க முயன்ற கொடூரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

Advertisement

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, உடலைக் கடத்தப் பயன்படுத்திய வாகனத்தைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். விழுப்புரத்தைச் சேர்ந்த தடயவியல் நிபுணர்கள் கொலை நடந்த வீடு மற்றும் சுடுகாட்டில் உள்ள சிவகாமியின் உடல் எச்சங்களை ஆய்வு செய்து வருகின்றனர். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படும் நிலையில், தலைமறைவாக உள்ள ரவிச்சந்திரன் மற்றும் யாகப்பன் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in