“அவன் தொல்லை தாங்க முடியல…” போதைக்கு அடிமையான மகனை ரூ.3 லட்சம் கொடுத்து தீர்த்துக்கட்டிய தந்தை..! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!! – cinefeeds
Connect with us

CRIME

“அவன் தொல்லை தாங்க முடியல…” போதைக்கு அடிமையான மகனை ரூ.3 லட்சம் கொடுத்து தீர்த்துக்கட்டிய தந்தை..! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலௌன் மாவட்டத்தில் உள்ள உரை நகரில், பெற்ற தந்தையே மகனைக் கூலிப்படை ஏவிப் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பஜரியா பகுதியைச் சேர்ந்த ரஷீத் அன்சாரி என்பவர், தன் 27 வயது மகன் ரஹீஸ் என்ற ஷானுவின் பழக்கவழக்கங்களால் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மகனை முழுமையாக ஒழித்துக்கட்ட திட்டமிட்ட ரஷீத், கூலிப்படையினருக்கு ரூ.5 லட்சம் கூலி பேசி, இந்தக் கொடூரக் கொலையைச் அரங்கேற்றியுள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட ரஹீஸ் நீண்டகாலமாகக் போதைப்பொருளுக்கு அடிமையாகி வீட்டின் பொருட்களை உடைப்பது, குடும்பத்தினரை அச்சுறுத்தும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரைத் திறந்து வைத்துத் தீவைக்க முயல்வது எனத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்துள்ளார். மகனின் போதை பழக்கத்தை மாற்றத் தந்தை அவரை முதலில் குவாலியரில் உள்ள ஒரு போதை மீட்பு மையத்தில் சேர்த்திருந்தார். இருப்பினும், அவரது தொல்லை தாங்க முடியாமல், அவரை நிரந்தரமாகக் கொன்றுவிடத் தந்தை முடிவெடுத்தார்.

Advertisement

திட்டத்தின்படி, கூலிப்படையினர் குவாலியர் போதை மீட்பு மையத்திலிருந்து ரஹீஸை வெளியே அழைத்துச் சென்று, காரினுள்ளேயே கயிற்றால் நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை ஒரு சாக்குமூட்டையில் அடைத்து மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியில் வீசிச் சென்றனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் கார் எண்ணை வைத்து விசாரணை நடத்திய மத்தியப் பிரதேச காவல்துறையினர், கொலையில் தொடர்புடைய தந்தை ரஷீத் அன்சாரி உட்பட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in