CRIME
“போட்டோவை டெலீட் பண்ண முடியாது..!” நட்பாக பழகி வாலிபர் செய்த பகீர் காரியம்.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோகம்…!!
கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில், விண்வெளி பொறியியல்படித்து வந்த ஹீமா என்ற மாணவி, முகமது நௌஷாத் என்ற வாலிபரின் தொடர் மிரட்டல் மற்றும் மன உளைச்சல் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் படித்து வந்த சமயத்தில் ஹீமாவிடம் நௌஷாத் பழகி நட்பை ஏற்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இருவரும் ஒன்றாகச் சுற்றுலாச் சென்றபோது ஹீமாவின் சில புகைப்படங்களை நௌஷாத் எடுத்துள்ளார். பின்னர் அந்தப் புகைப்படங்களை ஹீமாவின் அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஹீமா, அந்தப் புகைப்படங்களை உடனடியாக சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து நீக்குமாறு நௌஷாத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த நௌஷாத், புகைப்படங்களை நீக்க முடியாது என மறுத்ததோடு, தன்னிடம் உள்ள மேலும் பல புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி ஹீமாவைத் தொடர்ந்து மிரட்டியுள்ளார். மேலும், தன்னைத் காதலிக்குமாறும் வற்புறுத்தி மனரீதியாகக் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்துள்ளார். இந்தத் தொடர் அச்சுறுத்தல்களையும், அவமானத்தையும் தாங்க முடியாத மாணவி ஹீமா, மனமுடைந்து விஷம் குடித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
