சர்ச்சைகளில் சிக்கிய எம்.எல்.ஏ பல்லவிக்கு முக்கிய பதவி… தமிழ்நாடு கானுயிர் வாரியத்திற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்.. முதலமைச்சர் விஜய் அதிரடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சர்ச்சைகளில் சிக்கிய எம்.எல்.ஏ பல்லவிக்கு முக்கிய பதவி… தமிழ்நாடு கானுயிர் வாரியத்திற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்.. முதலமைச்சர் விஜய் அதிரடி..!!

Published

on

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு மாநில கானுயிர் வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த வாரியத்தின் புதிய உறுப்பினர்களாகக் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர், மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மற்றும் திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அளவில் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு செயல்படும் இந்த வாரியம், வனவிலங்குகள் மற்றும் காடுகளின் பாதுகாப்பு, மேலாண்மை தொடர்பான கொள்கைகளை வகுக்கும் உயரிய சட்டப்பூர்வ அமைப்பாகும். தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களின் எல்லைகளை மாற்றுவதற்கும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் சாலைகள், அணைகள் போன்ற வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் இந்த வாரியத்தின் முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும்.

Advertisement

தற்போது நியமிக்கப்பட்டுள்ள மூன்று சட்டமன்ற உறுப்பினர்களில், திரு.வி.க.நகர் எம்.எல்.ஏ. பல்லவி கானுயிர் வாரிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. அவர் எங்கு சென்றாலும் தனது கைக்குழந்தையைத் தூக்கிச் செல்வது, பிரச்சாரத்தின் போது ஹெல்மெட் அணியாமல் புல்லட் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளால் சமூக வலைதளங்களில் தொடர் விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வந்த நிலையில், இந்த முக்கியப் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in