LATEST NEWS
“ஹர்திக் பாண்டியாவுக்கு 2 ஆண்டுகள் அதிரடி தடை..?” பிசிசிஐ எடுக்கப்போகும் மரண ஆக்ஷன்.. கிரிக்கெட் உலகில் பரபரப்பு..!!
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்ட்யா, இருதரப்பு சர்வதேச போட்டிகள் மற்றும் விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி போன்ற உள்ளூர் தொடர்களைப் புறக்கணித்துவிட்டு, ஐபிஎல் தொடருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பிசிசிஐ-க்கு தகவல் கிடைத்துள்ளது. வாரியத்தின் அறிவுறுத்தல்களை மதிக்காமல், நேரடியாக 2027 ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பைத் தொடர்களை மட்டுமே இலக்காகக் கொண்டு அவர் செயல்பட முயல்வதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் அதிருப்தியடைந்துள்ள பிசிசிஐ, மற்ற வீரர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், அவருக்கு இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடர்களில் விளையாட 2 ஆண்டுகள் வரை தடை விதிக்கத் திட்டமிட்டு வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னதாக, இதேபோன்று உள்ளூர் தொடர்களைப் புறக்கணித்த இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற இளம் வீரர்கள் மீதும் பிசிசிஐ கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக ஓரங்கட்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹர்திக் பாண்ட்யா வரவிருக்கும் இலங்கைத் தொடர் மற்றும் உள்நாட்டுத் தொடர்களில் பங்கேற்க மறுத்தால், அவரை முற்றிலுமாக ஓரங்கட்டி ஐபிஎல் விளையாடுவதற்கும் முட்டுக்கட்டை போட வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் தற்சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
