“நான் காதலிச்சேன்… திருடல…” சொந்த மகளின் மானத்தை ஏலமிட்ட குடும்பத்தினர்.. எதிர்ப்பும் காட்டாமல் அந்தச் சிறுமி செய்த காரியம்..இணையத்தைக் குலுக்கும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

“நான் காதலிச்சேன்… திருடல…” சொந்த மகளின் மானத்தை ஏலமிட்ட குடும்பத்தினர்.. எதிர்ப்பும் காட்டாமல் அந்தச் சிறுமி செய்த காரியம்..இணையத்தைக் குலுக்கும் பகீர் வீடியோ..!!

Published

on

பீகார் மாநிலம் சமஸ்திப்பூர் பகுதியில், காதலித்த குற்றத்திற்காக மைனர் சிறுமி ஒருவரை அவரது தாயும் சகோதரியும் நடுரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கியதோடு, அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வைரலாக்கிய குடும்பத்தினரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்திப்பூரைச் சேர்ந்த அந்த மைனர் சிறுமியும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவனும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பேசிக்கொண்டிருந்ததை நேரில் பார்த்த குடும்பத்தினர், அவர்களை அமரவைத்து பக்குவமாக எடுத்துரைக்காமல், ஒட்டுமொத்த ஊர் மக்கள் முன்னிலையில் ஒரு காட்சிப் பொருளாக மாற்றியுள்ளனர். அவமானத்தையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்ணைப் பொதுவெளியில் வைத்து அவளது தாயும் சகோதரியும் இரக்கமின்றி தாக்கியுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலின் போதும், அந்தச் சிறுமி எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், முகத்தில் ஒரு புன்னகையோடு தனது காதலைத் தைரியமாக ஏற்றுக்கொண்ட விசித்திரமான காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. “நான் காதலித்தேன், எந்தத் திருட்டையும் செய்யவில்லை; என் காதலை நான் ஏற்றுக்கொள்கிறேன், இந்தச் சமூகமும் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவளது முகபாவனை கூறுவது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தவறு செய்திருந்தாலும் தங்களது சொந்த மகளின் மானத்தைப் பொதுவெளியில் ஏலமிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட குடும்பத்தினரின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்குச் சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in