நள்ளிரவு கொடூரம்.. மைனர் சிறுமியை சித்திரவதை செய்த உடன்பிறந்த சகோதரர்கள்… காட்டில் வீசப்பட்ட பிஞ்சுயிர்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

நள்ளிரவு கொடூரம்.. மைனர் சிறுமியை சித்திரவதை செய்த உடன்பிறந்த சகோதரர்கள்… காட்டில் வீசப்பட்ட பிஞ்சுயிர்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டம் கைர்கர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியே சென்ற மைனர் சிறுமி ஒருவரை இரண்டு உடன்பிறந்த சகோதரர்கள் கடத்திச் சென்று கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற அச்சிறுமியை, ஜகத் மற்றும் ரிஷி என்ற இரு சகோதரர்கள் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுள்ளனர். இக்கொடூரச் செயலுக்கு அச்சிறுமி பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அவர்கள் அவளை இரும்புத் தடிகளாலும் ஆயுதங்களாலும் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் சிறுமி சுயநினைவை இழந்து ரத்த வெள்ளத்தில் சரிந்ததை அடுத்து, அவள் இறந்துவிட்டதாகக் கருதிய அந்த மிருகங்கள், உடலை அருகில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

மறுநாள் காலையில் அந்த வழியாகச் சென்ற கிராம மக்கள், காட்டில் இருந்து பலத்த முனகல் சத்தம் கேட்பதைக் கண்டு அங்கு சென்று பார்த்தபோது, சிறுமி ஆபத்தான நிலையில் ரத்தக் கறைகளுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அச்சிறுமி தீவிர சிகிச்சைக்காக ஆக்ரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சுயநினைவற்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் மாவட்ட எஸ்பி ஆதித்யா லாங்கே தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவு நெடுஞ்சாலை அருகே தப்பியோட முயன்ற ஜகத் மற்றும் ரிஷி ஆகிய இருவரையும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி, காலில் சுட்டுக் காயப்படுத்தி அதிரடியாகக் கைது செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in