அடுத்தடுத்து சிக்கும் திருச்சி விக்கெட்டுகள்..! அன்பில் மகேஸைத் தொடர்ந்து கே.என்.நேருவுக்குக் கைது கத்தி..? தவெக அரசு மீது திமுகவுக்கு ஷாக்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்தடுத்து சிக்கும் திருச்சி விக்கெட்டுகள்..! அன்பில் மகேஸைத் தொடர்ந்து கே.என்.நேருவுக்குக் கைது கத்தி..? தவெக அரசு மீது திமுகவுக்கு ஷாக்..!!

Published

on

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பணியிடங்களை நிரப்பியதில் ₹634 கோடி லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு உச்ச நீதிமன்றத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை தீவிரமடைந்துள்ளதுடன் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு முக்கிய திமுக பிரமுகரும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஊழல் வழக்கு ஒன்றில் லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே கே.என்.நேருவுக்குத் தொடர்புடைய சுமார் 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடிச் சோதனைகளை நடத்தியது. அடுத்தடுத்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு முக்கியத் தலைவர்கள் மீதான இந்தச் சட்ட நடவடிக்கைகள் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இடைத்தேர்தலை முன்னிட்டு, திருச்சியில் தங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கவே அங்குள்ள தங்களின் முக்கிய முகங்களை ஆளுங்கட்சியான தவெக அரசு திட்டமிட்டு குறிவைத்து வருவதாக திமுக தரப்பில் அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in