“23 நாட்களாகியும் கிடைக்காத துப்பு” திடீரென லாரி டிரைவர்கள் பக்கம் திரும்பிய சந்தேகம்… சல்லடை போடும் சிபிசிஐடி… செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் …! – cinefeeds
Connect with us

CRIME

“23 நாட்களாகியும் கிடைக்காத துப்பு” திடீரென லாரி டிரைவர்கள் பக்கம் திரும்பிய சந்தேகம்… சல்லடை போடும் சிபிசிஐடி… செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம் …!

Published

on

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலமூண்டி பகுதியில் காணாமல் போன 7 வயது சிறுமி ஹேமலதா குறித்த வழக்கில், 23 நாட்களாகியும் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்காததால் பரபரப்பு நீடிக்கிறது. கடந்த மாதம் 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். இந்த வழக்கை முதலில் மாவட்டக் காவல்துறை விசாரித்த நிலையில், விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

தற்போது சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி ஒருவனுடன் தொடர்பில் இருந்த அரவிந்த் என்ற இளைஞரை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

Advertisement

மேலும், சந்தேகம் லாரி ஓட்டுநர்கள் பக்கம் திரும்பியதை அடுத்து, ஆலமூண்டி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 13 தேசிய அனுமதிச் சீட்டு பெற்ற லாரி ஓட்டுநர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர்களின் புகைப்படங்களை உணவகங்கள், தேநீர்க் கடைகள் போன்ற பொது இடங்களில் ஒட்டி பொதுமக்களிடம் காட்டியும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஏற்கனவே கர்நாடக மாநிலம் பெங்களூரிலும் தேடுதல் நடத்தப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகைக்குள் சிறுமி குறித்து முக்கியத் தகவல் கிடைக்கும் என போலீசார் நம்புகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in