“என் போனை உடைச்சிட்டான்..” பாரில் புகுந்து போதையில் அண்ணன், தங்கை நடத்திய வெறி ஆட்டம்.. பீர் பாட்டிலை உடைத்து ஊழியரைக் குத்த முயன்ற கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் போனை உடைச்சிட்டான்..” பாரில் புகுந்து போதையில் அண்ணன், தங்கை நடத்திய வெறி ஆட்டம்.. பீர் பாட்டிலை உடைத்து ஊழியரைக் குத்த முயன்ற கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்..!!

Published

on

சென்னை கொளத்தூர் ஜம்புலிங்கம் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில் புகுந்து அங்கு நின்று கொண்டிருந்த ஊழியரைக் கொலை மிரட்டல் விடுத்து பீர் பாட்டிலால் குத்த முயன்ற அதிர்ச்சி சம்பவம் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி.கே.எம் காலனி பகுதியைச் சேர்ந்த திவாகர் மற்றும் அவரது தங்கை பாவ்யா ஆகிய இருவரும், கடந்த நவம்பர் 4ஆம் தேதி இரவு போதையின் உச்சத்தில் பாருக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பீர் அருந்திக் கொண்டிருந்த ஒருவரிடமிருந்து பாட்டிலைப் பிடுங்கி உடைத்த பாவ்யா, “என் போனை உடைத்துவிட்டான்” என்று கூச்சலிட்டபடி, அங்கிருந்த பார் ஊழியர் ராம்கியை (39) கொடூரமாகக் குத்த முயன்றுள்ளார்.

இவர்களின் இந்த அராஜகப் போக்கைக் கண்டு பயந்த மதுப்பிரியர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடிய நிலையில், அங்கிருந்தவர்கள் அண்ணன்-தங்கை இருவரையும் சமாதானப்படுத்த முயன்றதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து கடந்த 15 ஆண்டுகளாக அங்குப் பணியாற்றி வரும் ஊழியர் ராம்கி அளித்த புகாரின் பேரில், பெரவள்ளூர் காவல்துறையினர் திவாகர் மற்றும் பாவ்யா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு, தலைமறைவாக உள்ள அண்ணன் மற்றும் தங்கை ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in