CRIME
“தனியா பார்க்கலாமா..?” இன்ஸ்டாகிராம் ‘டிம்பிள் குயின்’ போட்ட மெசேஜ்… ஆசையாகச் சென்ற ஆண்களுக்குக் காத்திருந்த மரண பயம்.. கணவனுடன் சேர்ந்து செய்த பகீர் காரியம்.. அதிர்ச்சி பின்னணி..!!
தெலங்கானா மாநிலத்தில், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் ஆண்களைத் தனது வீட்டிற்கு வரவழைத்து, கணவனுடன் சேர்ந்து ஆபாச வீடியோ எடுத்து பல லட்சம் ரூபாய் பிளாக்மெயில் செய்த அதிர்ச்சி தம்பதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் ‘லல்லிடிம்பிள்குயின்’ (Lallydimplequeen) மற்றும் யூடியூபில் ‘கரீம்நகர் பில்லா 143’ ஆகிய கணக்குகளைப் பயன்படுத்தி வந்த அந்தப் பெண், தனது ஃபாலோயர்களுக்கு நேரடியாக மெசேஜ் அனுப்பித் தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்புவதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அவ்வாறு வரும் ஆண்கள் அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் சமயத்தில், அவளது கணவர் மறைந்திருந்து அதனை ரகசியமாக வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டிப் பெருந்தொகையைப் பறிப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.
விசாரணையில், இந்தத் தம்பதியினர் மார்பிள் தொழில் செய்து வந்ததும், அதில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் மற்றும் கடன் சுமை காரணமாகவே இந்த விபரீதப் பாதையைத் தேர்ந்தெடுத்ததும் தெரியவந்துள்ளது. பிளாக்மெயில் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு அவர்கள் ரூ.65 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டு மனையையும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஆடம்பரக் காரையும் வாங்கியுள்ளனர். இரண்டு குழந்தைகளைக் கொண்ட இந்தத் தம்பதியின் மோசடி வலை குறித்துப் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், கரீம்நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து, அவர்களிடம் இருந்த சொகுசு கார் மற்றும் முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
