பகீர்..! நூலகத்தில் “திரிஷா விஜய்” பெயரை பார்த்து பதறிய எழுத்தாளர்… கமிஷன் வாங்கியது யார்..? வெடிக்கும் பெரியார் அறிவுலக ஊழல் விவகாரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பகீர்..! நூலகத்தில் “திரிஷா விஜய்” பெயரை பார்த்து பதறிய எழுத்தாளர்… கமிஷன் வாங்கியது யார்..? வெடிக்கும் பெரியார் அறிவுலக ஊழல் விவகாரம்..!!

Published

on

பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் எதிராக திமுக 5 முக்கியக் கேள்விகளை முன்வைத்துக் கடுமையான சாடல்களை எழுப்பியுள்ளது. பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் போலி நூல்களில் ‘ஜூன் மாதம்’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதாக திமுக சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், அந்தத் தேதி தவெகவின் “டம்மி சிஎம்” பிறந்தநாள் என்றும் திமுக விமர்சித்துள்ளது.

அறிவுலகத்தில் உள்ள புகழ்பெற்ற பிற பதிப்பகங்களின் நூல்கள் அனைத்தும் முந்தைய திமுக ஆட்சியின் ‘மார்ச் மாத’ முத்திரையோடு இருக்கும் நிலையில், இந்த போலி நூல்கள் எப்போது வாங்கப்பட்டன என்ற கேள்வியைத் திமுக எழுப்பியுள்ளது. தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது என்றும், திரிஷா விஜய் மற்றும் விஜய் பாலு போன்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களைப் பார்த்து திமுக ஆட்சியின் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் பதறிய பிறகுதான் தவெக அரசுக்கே இந்த விவகாரம் தெரிந்ததா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Advertisement

எந்தவொரு அடிப்படை விபரமும் தெரியாமல் தான் தவெகவின் முதலமைச்சர் இந்த விவகாரத்தில் அறிக்கை விட்டுள்ளாரா என்றும் திமுக காரசாரமாகக் கேட்டுள்ளது. தவெக முன்வைத்த ஊழல் புகார்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், புத்தகங்களில் உள்ள முத்திரைத் தேதிகளை ஆதாரமாகக் காட்டி திமுக இந்த ஐந்து கேள்விகளைத் தொடுத்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in