LATEST NEWS
“விவசாயிகளுக்கு அரசு கொடுத்த மெகா தீபாவளிப் பரிசு..” ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி.. வெளியானது அதிரடி அரசாணை..!!
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களுக்கான தள்ளுபடி வரம்பை உயர்த்தி புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது, இதன்படி விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். ஒருவேளை விவசாயிகள் ரூ.75,000-க்கும் அதிகமாகப் பயிர்க்கடன் பெற்றிருந்தால், அவர்களது கடன்தொகையில் அதிகபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அரசு ஒட்டுமொத்தமாக ரூ.9,062.83 கோடி நிதியைத் தற்போது ஒதுக்கியுள்ளது.
இருப்பினும், இந்த அரசாணையின்படி அனைத்து பயிர்க்கடன்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் 1-ஆம் தேதி முதல் 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரையிலான குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு மட்டுமே இந்தத் தள்ளுபடி வரம்பு பொருந்தும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முக்கிய அறிவிப்பு தமிழகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
