“30 கோடி பேரம்.. ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக கூட்டுச்சதி..!” தவெக எம்.எல்.ஏ முஸ்தபா உடைத்த அதிரடி ரகசியம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“30 கோடி பேரம்.. ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுக கூட்டுச்சதி..!” தவெக எம்.எல்.ஏ முஸ்தபா உடைத்த அதிரடி ரகசியம்.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Published

on

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டு வருவதாக தவெக மதுரை எம்.எல்.ஏ முஸ்தபா செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டியுள்ளார். இன்று காலை மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக தேர்தலில் வெற்றி பெற்று நல்லாட்சியை கொடுத்து வருவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், மக்கள் மன்றத்தில் தோற்றுப்போன திமுகவும் அதிமுகவும் குறுக்கு வழியில் தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் பேரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். தவெக அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்துப் வாக்களிக்கத் தனக்கே குதிரை பேர அழைப்பு வந்ததாக அவர் பகிரங்கமாகப் புகார் கூறியுள்ளார்.

இந்தக் குதிரை பேரத்தின் போது, முதற்கட்டமாக 15 கோடி ரூபாயும், பின்னர் 15 கோடி ரூபாயும் என மொத்தம் 30 கோடி ரூபாய் தருவதாகத் தனக்கு ஆசைவார்த்தை கூறப்பட்டதாக முஸ்தபா விவரித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த ஒரு அதிமுக நிர்வாகிதான் தன்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்படிப் பேசினார் என்றும், தவெக எம்.எல்.ஏக்கள் 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் விலை போக மாட்டார்கள் என்றும் அவர் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார். இந்தச் சதித் திட்டம் குறித்துத் கட்சியின் தலைமையிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும், இதன் பின்னணியில் இருந்து செயல்படுபவர்கள் யார் என்பது இன்னும் சில நாட்களில் முழுமையாக வெளிச்சத்திற்கு வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in