“கொழுந்தன் பேச்சைக் கேட்க மறுத்த அண்ணி..” வாழைத்தோட்டத்தில் நேர்ந்த பயங்கரம்.. கொலையை மறைக்க கணவனும் மாமியாரும் செய்த காரியம்.. உறைந்து போன போலீசார்..!! – cinefeeds
Connect with us

CRIME

“கொழுந்தன் பேச்சைக் கேட்க மறுத்த அண்ணி..” வாழைத்தோட்டத்தில் நேர்ந்த பயங்கரம்.. கொலையை மறைக்க கணவனும் மாமியாரும் செய்த காரியம்.. உறைந்து போன போலீசார்..!!

Published

on

திருவண்ணாமலை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தங்கி துணி வியாபாரம் செய்து வந்த குட்டிமாரி (33) என்ற பெண், அவரது கொழுந்தன் ரவியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு, உடல் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரண்டை – சுந்தரபாண்டியபுரம் சாலையில் உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், கொல்லப்பட்டவர் குட்டிமாரி என்பதும், அவருக்கும் அவரது கொழுந்தன் ரவிக்கும் இடையே இருந்த பழக்கத்தை கைவிடுமாறு ஏற்பட்ட தகராறில், ரவி துண்டால் குட்டிமாரியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் அம்பலமானது.

இந்தக் கொடூரக் கொலையை மறைப்பதற்காக, குற்றவாளி ரவி தனது அண்ணனும் குட்டிமாரியின் கணவருமான முருகன் மற்றும் தங்களது தாயார் சிவகாமி ஆகியோரின் உதவியோடு உடலை வாழைத்தோட்டத்திற்கு எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துத் தடயங்களை அழிக்க முயன்றுள்ளார். சுரண்டை பகுதி தனிப்படை போலீசார் நடத்திய மின்னல் வேக விசாரணையில் இந்தத் திடுக்கிடும் உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, கொலை மற்றும் தடயங்களை அழித்த குற்றத்திற்காக ரவி, முருகன், சிவகாமி ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in