CRIME
அய்யோ கடவுளே.. வெயிட் மெஷினை தொட்ட 10 மாத குழந்தை.. அடுத்த நிமிடமே நடந்த கொடூரம்.. கதறும் பெற்றோர்..!!
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டத்தில், சார்ஜ் போட்டுக் கொண்டிருந்த மின்னணு எடை இயந்திரத்திலிருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் 10 மாத பச்சிளம் பெண் குழந்தை துடிதுடித்து உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகம் அரங்கேறியுள்ளது. அதிகாலை வேளையில், வீட்டில் சார்ஜில் இணைக்கப்பட்டிருந்த எடை இயந்திரத்தின் மீது அந்தக் குழந்தை தவழ்ந்து சென்று விளையாட்டாகக் கையை வைத்துள்ளது. அப்போது திடீரெனப் பாய்ந்த கடுமையான மின்சார அதிர்வால் அந்தப் பிஞ்சு குழந்தை அலறித் துடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தந்தை, பதற்றத்துடன் ஓடிவந்து குழந்தையைத் தூக்கியுள்ளார்.
மின்சாரப் பாதிப்பிற்குள்ளான குழந்தையை அவசர அவசரமாக மீட்டு, சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கைவிரித்ததைக் கேட்டுப் பெற்றோர்கள் கதறி அழுத காட்சி பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கியது. இச்சம்பவம் குறித்து ஜகித்யாலா பகுதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடுகளில் மின்சாரக் கருவிகளைக் கையாளும்போது பெற்றோர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
