CINEMA
சர்கார் + வாரிசு = ஓம்..! அரசியல் களத்தில் தனுஷின் பக்கா ஸ்கெட்ச்.. ‘அதிர்வு’ பேச்சின் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன..?
திரையுலகில் புதிதாக ஒன்று உருவாகும்போது சில அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும் என்று நடிகர் தனுஷ் பேசியுள்ளது அவரது அரசியல் நுழைவுக்கான தொடக்கமாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் வெளியிட்ட இந்தக் கருத்து, வெறும் சினிமா நிகழ்வுக்கானது மட்டுமல்ல என்றும், இதன் பின்னணியில் ஆழமான அரசியல் சமிக்ஞை ஒளிந்திருக்க வாய்ப்புள்ளது என்றும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில், தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் தனது திரைப்பயணத்தின் இறுதிக்கட்டத்தில் மேற்கொண்ட அரசியல் நகர்வுகளோடு தனுஷின் பேச்சு ஒப்பிடப்படுகிறது. முன்னதாக விஜய் நடித்த ‘சர்கார்’ மற்றும் ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களில், அவர் மேடையில் பேசிய மறைமுக அரசியல் பேச்சுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதே பாணியிலான ஒரு உத்தியைத்தான் தற்போது தனுஷும் கையாளத் தொடங்கியிருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக, அன்று மேடைகளில் தனக்கு “ரசிகர்கள்தான் எல்லாமே” எனக் கைகாட்டி விஜய் அரசியல் அடித்தளம் அமைத்தது போலவே, தற்போது தனுஷும் தனது ரசிகர்களைக் கொஞ்சம் கூடுதலாகவும் எக்ஸ்ட்ராவாகவும் புகழ்ந்து பேசி வருவது அரசியல் அரங்கில் உற்றுநோக்கப்படுகிறது. தனது ரசிகர் மன்றங்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்கும், மக்களிடையே தனது பிம்பத்தை வலுப்படுத்துவதற்கும் தனுஷ் போடும் திட்டமே இந்த ரசிகர் பாசம் மற்றும் அதிர்வுப் பேச்சு என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
