அதிகாலையில் பயங்கரம்.. வீட்டு பால்கனியில் விளையாடிய மரண கம்பி.. தந்தையைக் காப்பாற்றச் சென்ற 24 வயது மகனுக்கும் நேர்ந்த கோர முடிவு..!! – cinefeeds
Connect with us

CRIME

அதிகாலையில் பயங்கரம்.. வீட்டு பால்கனியில் விளையாடிய மரண கம்பி.. தந்தையைக் காப்பாற்றச் சென்ற 24 வயது மகனுக்கும் நேர்ந்த கோர முடிவு..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் பகுதியில், வீட்டின் பால்கனி இரும்பு கிரில் கம்பியில் எதிர்பாராதவிதமாகப் பாய்ந்த உயர் அழுத்த மின்சாரத்தில் சிக்கித் தந்தையும் மகனும் துடிதுடித்து உயிரிழந்ததோடு, தாயார் 70% தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வரும் நெஞ்சை உலுக்கும் கொடூர விபத்து அரங்கேறியுள்ளது. தொழிலதிபரான ராகேஷ் குப்தா (45) என்பவர் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்கம் போல் எழுந்து பால்கனிக்குச் சென்று அங்கிருந்த இரும்பு கிரில் கம்பியைத் தொட்டுள்ளார். அப்போது, அருகில் சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பி கிரில்லில் உரசியதால் அதில் மின்சாரம் பாய்ந்திருந்தது. இதனால் ராகேஷ் குப்தா தூக்கி வீசப்பட்டு மின்சார அதிர்வில் சிக்கிக்கொண்டார். தனது தந்தை கிரில் கம்பியில் ஒட்டிக்கொண்டு துடிப்பதைக் கண்ட அவரது மகன் ஓம் குப்தா (24), அவரைக் காப்பாற்ற ஓடிவந்து தொட்டபோது அவரும் மின்சாரப் பாதிப்பிற்குள்ளானார். தங்களது கண்முன்னே கணவனும் மகனும் துடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் வர்ஷா குப்தா, இருவரையும் காப்பாற்ற முயன்றபோது அவருக்கும் 70 சதவீத கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன.

இந்த பயங்கரச் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மின்சார விபத்தில் சிக்கிய மூன்று பேரையும் உடனடியாக மீட்டுப் பலோடா பஜார் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், தந்தை ராகேஷ் குப்தா மற்றும் மகன் ஓம் குப்தா ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பலத்த தீக்காயமடைந்த தாய் வர்ஷா குப்தா, மேல் சிகிச்சைக்காக ராய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கோர விபத்து குறித்து பலோடா பஜார் பகுதி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மின்சாரத் துறையின் அலட்சியம் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in