“வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு..” குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்ட நடிகை ரோஜா.. ஆந்திராவை உலுக்கிய பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு..” குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்லப்பட்ட நடிகை ரோஜா.. ஆந்திராவை உலுக்கிய பகீர் சம்பவம்..!!

Published

on

ஆந்திர மாநிலம் நகரி தொகுதிக்குட்பட்ட விஜயபுரம் மண்டலம் இல்லத்தூர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டி.சி. வேட்பாளராக உதயகிரி தேவி போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் அவர் 10 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் முதலில் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாகக் கூறி, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி தரப்பில் கடும் கோரிக்கை வைக்கப்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சியின் கோரிக்கையை ஏற்று மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெளியே அனுப்பிவிட்டு, தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் ஜெயபிரதா 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் புதிய அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அதிரடி முடிவு மாற்றத்தால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சரும், பிரபல நடிகையுமான ரோஜா, தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிகிரி கல்லூரி வாக்கு எண்ணும் மையம் முன்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Advertisement

போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ரோஜா, வாக்கு எண்ணும் மையத்திற்குள் தங்களது கட்சியின் முகவர்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இதன் காரணமாக வாக்கு எண்ணிக்கையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாகவும், எனவே மீண்டும் முறையான மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அங்கு பதற்றமான சூழல் நிலவியதைத் தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்ட ரோஜாவை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in