நடுரோட்டில் பற்றி எரிந்த பைக்.. ஓடிவந்த வாலிபர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

நடுரோட்டில் பற்றி எரிந்த பைக்.. ஓடிவந்த வாலிபர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மோகன் சாலையில் அமைந்த ககோரி திருப்பம் அருகே, மெக்கானிக் கடை ஒன்றில் பைக்கின் அலாய் வீலை கழற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த பைக் திடீரென மளமளவென்று தீப்பற்றி எரியத் தொடங்கியது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பைக் திடீரெனத் தீப்பிடித்ததால், அங்கிருந்த கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அந்த இடமே பெரும் பரபரப்பாகவும் பீதியாகவும் மாறியது.

பைக் எரியத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, அங்கிருந்த வாலிபர் ஒருவர் சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக அருகில் இருந்த தீயணைப்புக் கருவியை எடுத்து வந்து, தீ மீது அடித்து அதிரடியாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். தீ மற்ற இடங்களுக்கும் கடைகளுக்கும் பரவுவதற்கு முன்பாகவே, அந்த வாலிபர் மிக விரைவாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தார். அந்த இளைஞரின் இந்தச் சாதுரியமான மற்றும் விரைவான நடவடிக்கையால், அங்கு ஏற்படவிருந்த ஒரு மிகப்பெரிய தீ விபத்து நல்வாய்ப்பாகத் தவிர்க்கப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in