LATEST NEWS
சோனமுத்தா போச்சா..! கல்யாணமான 4-வது நாளே லட்சங்களுடன் மணமகள் எஸ்கேப்.. கதறி துடிக்கும் மணமகன் வீட்டார்கள்..!!
இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில், திருமணமான நான்கே நாட்களில் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்துடன் புதுப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் புதிய மருமகள் காலடி வைத்த மகிழ்ச்சியில் இருந்த மாப்பிள்ளை வீட்டாரை இந்தச் சம்பவம் நிலைகுலையச் செய்துள்ளது.
அரியானா மாநிலம் யமுனாநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கும், பிலாஸ்பூரைச் சேர்ந்த வாலிபருக்கும் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து கணவர் வீட்டிற்கு வந்த அந்தப் பெண், நவம்பர் 4-ஆம் தேதி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திடீரென மாயமாகியுள்ளார். அவர் வீட்டை விட்டுத் தப்பியோடும் போது பீரோவில் இருந்த 16 லட்சம் மதிப்பிலான நகைகளையும், 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்.
காணாமல் போன புதுப்பெண்ணை உறவினர்கள் வீடுகளிலும் பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்காததால், மாப்பிள்ளையின் சகோதரி பராடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணத்துடன் தலைமறைவான அந்தப் பெண்ணைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
