LATEST NEWS
ஜெகன் மோகன் ரெட்டி இல்லத் திருமண விழா: த்ரிஷாவுடன் இணைந்து பங்கேற்று மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் விஜய்.. வைரலாகும் புகைப்படம்..!!
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒன்றாகக் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவருமான சர்மிளாவின் மகள் அஞ்சலிக்கும், அமெரிக்காவில் வசித்து வரும் சோமலா ரகுராம் ரெட்டிக்கும் வரும் நவம்பர் 25-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இன்று சென்னையில் இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
முன்னதாக, ஜெகன் மோகன் ரெட்டியின் மாமா மகன் திருமண விழாவிலும் முதலமைச்சர் விஜய் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற்றுள்ள இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
