LATEST NEWS
சீன உளவாளியுடன் கள்ளத்தொடர்பு… மளமளவென சரிந்த என்விடியா பங்குகள்.. 4.5 டிரில்லியன் டாலர் சாம்ராஜ்யத்தை உலுக்கும் ரகசியக் காதல் விவகாரம்..!!
உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். சுமார் 4.5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தத் தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் சிஇஓ-வே, “நான் என் மனைவிக்குத் துரோகம் செய்துவிட்டேன்” எனப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க உளவு அமைப்புகளால் கண்காணிக்கப்பட்டு வந்த ஆலிஸ் ஹுவாங் என்ற சீன தொழிலதிபருடன் ஜென்சன் நெருக்கமாக இருந்துள்ளார். இதன் காரணமாக, அமெரிக்காவின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப ரகசியங்கள் சீனாவுக்குக் கசிந்திருக்குமோ என்ற தேசிய பாதுகாப்பு அச்சம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க என்விடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு தற்போது தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
தவறை ஒப்புக்கொண்ட ஜென்சன் ஹுவாங், “நான் என் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டேன்; வாரியத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், சீன வெளியுறவு அமைச்சகம் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளதுடன், இவை அனைத்தும் தங்களைக் களங்கப்படுத்துவதற்காகச் ஜோடிக்கப்பட்ட வீண் பழிகள் என்று கூறியுள்ளது.
இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் என்விடியா நிறுவனத்தின் பங்குகள் 4% முதல் 6% வரை சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் நிறுவனத்திற்குச் சுமார் 200 முதல் 270 பில்லியன் டாலர்கள் வரை சந்தை மதிப்பு இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தை வழிநடத்தி வந்த ஜென்சன் ஹுவாங்கின் பதவிக்கு இந்தச் சர்ச்சையால் ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
