“உங்க வீட்ல சொல்லிடுவேன்” உல்லாசமாக இருந்த கள்ளகாதலர்கள்.. நேரில் பார்த்த சிறுவனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உங்க வீட்ல சொல்லிடுவேன்” உல்லாசமாக இருந்த கள்ளகாதலர்கள்.. நேரில் பார்த்த சிறுவனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில், தங்களின் கள்ளக்காதல் விவகாரத்தை நேரில் கண்ட பத்தாம் வகுப்பு மாணவனை, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டம் சின்னகோருகொண்டா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவன் ஜில்லெல்லா ரவி என்பவரே இக்கொலைக்கு பலியான துரதிர்ஷ்டசாலி ஆவார்.

கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அபர்ணா என்ற பெண்ணுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவர்களது தனிமையை பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ரவி தற்செயலாக நேரில் பார்த்துள்ளார். மேலும், இந்த ரகசிய விவகாரத்தை இருவரின் குடும்பத்தினரிடமும் கூறிவிடுவேன் என்று ரவி எச்சரித்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கள்ளக்காதல் ஜோடி, ரவியை எப்படியாவது தீர்த்துக்கட்ட முடிவு செய்தது.

Advertisement

இதன்படி கடந்த அக்டோபர் 24ஆம் தேதி, ரவியை கிராமத்திற்கு வெளியே அழைத்துச் சென்ற இருவரும், அவர் குடித்த குளிர்பானத்தில் பயிர்நாசினி விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளனர். விஷத்தின் தாக்கம் அதிகரித்து ரவியின் உடல்நிலை மோசமடைந்ததால், பயந்துபோன குற்றவாளிகள் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, அக்டோபர் 25 அன்று குடும்பத்தினர் ரவியை கம்மம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அபர்ணா மற்றும் அஜய் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in