“நம்ம ஊர் மானத்தையே வாங்குறீங்களே” “₹126-க்கு ₹500 ஆ.? வெளிநாட்டுப் பயணியிடம் 5 மடங்கு கட்டணம் கேட்ட சென்னை ஆட்டோ டிரைவர்… கொதித்தெழும் நெட்டிசன்கள்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நம்ம ஊர் மானத்தையே வாங்குறீங்களே” “₹126-க்கு ₹500 ஆ.? வெளிநாட்டுப் பயணியிடம் 5 மடங்கு கட்டணம் கேட்ட சென்னை ஆட்டோ டிரைவர்… கொதித்தெழும் நெட்டிசன்கள்…!!

Published

on

சென்னையில் வெளிநாட்டுப் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஐந்து மடங்கு கூடுதல் கட்டணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பிட்ட ஒரு இடத்திற்குச் செல்வதற்கு மொபைல் செயலி ஒன்றில் ₹126 மட்டுமே கட்டணம் எனக் காட்டியுள்ளது. ஆனால், அந்த ஆட்டோ ஓட்டுநர் வெளிநாட்டவர் என்பதால் அவரிடம் நேரடியாக ₹500 கட்டணம் கேட்டுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வெளிநாட்டுப் பயணி, “செயலியில் ₹126 காட்டும் நிலையில் நீங்கள் ஏன் ₹500 கேட்கிறீர்கள், எதற்காக 5 மடங்கு கூடுதல் கட்டணம் கேட்டு எங்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்?” என ஆட்டோ ஓட்டுநரிடம் நேரடியாகவே கேள்வி எழுப்பிக் கரார் காட்டியுள்ளார். பயணி கட்டணமாக ₹500 தர மறுத்ததைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் தனது கட்டணத்தை ₹400, ₹300 எனப் படிப்படியாகக் குறைத்து சமரசத்திற்கு வந்துள்ளார். இருப்பினும் அந்த வெளிநாட்டவர் அநியாயக் கட்டணத்திற்கு உடன்படாமல் ஓட்டுநரின் செயலைக் கண்டித்துள்ளார்.

Advertisement

இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் அந்த வெளிநாட்டுப் பயணி தனது மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட, அது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் இப்படி அநியாயக் கட்டணம் கேட்டு, தமிழ்நாட்டின் மற்றும் நம் ஊரின் மானத்தை வெளிநாட்டவரிடமும் வாங்குகிறீர்களே” என அந்த ஆட்டோ ஓட்டுநரைக் கடுமையாகச் சாடித் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in