“கிளைமாக்ஸ் மக்கள் எழுத போறாங்க” முதல்வர் அதுக்குள்ள விழித்துக்கொள்வாரா.? CM விஜய்யை உலுக்கிய டி.டி.வி. தினகரனின் அந்த 3 வார்த்தைகள்.!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கிளைமாக்ஸ் மக்கள் எழுத போறாங்க” முதல்வர் அதுக்குள்ள விழித்துக்கொள்வாரா.? CM விஜய்யை உலுக்கிய டி.டி.வி. தினகரனின் அந்த 3 வார்த்தைகள்.!!

Published

on

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள டி.டி.வி. தினகரன், முதலமைச்சர் ஒருபுறம் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தினாலும், மறுபுறம் சென்னை அபிராமபுரம், காசிமேடு, செம்பியம் போன்ற பகுதிகளில் அடுத்தடுத்து படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை மீதான நம்பிக்கை சீர்கெட்டுப் போய்விட்டதாகவும், பொதுமக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழும் அவல நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநிலத்தில் தொடரும் தொடர் கொலைகளைத் தடுக்கத் தவறிவிட்டு, வெறும் ஏட்டுச் சுரைக்காயாக அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு வரும் அரசு இதனை வேடிக்கைப் பார்ப்பதாக அவர் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க வேண்டிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், ஒவ்வொரு நாளும் நடக்கும் கொலைகளைத் தடுத்து நிறுத்தாமல், திரைப்படங்களின் நாள் வசூல் கணக்கைப் பார்ப்பது போல அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரா என்ற சந்தேகமும் எழுவதாக அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

Advertisement

மெகா தொடர் போல நீண்டு கொண்டிருக்கும் இந்த சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்கு மக்களே முன்வந்து கிளைமாக்ஸ் எழுதுவதற்கு முன்பாகவாவது முதலமைச்சர் விழித்துக் கொள்வாரா அல்லது இதுவே தனது ஆட்சியின் சாதனையாக மார்தட்டிக் கொள்வாரா என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் பாதுகாப்பைப் பேணிக்காப்பது அரசின் அடிப்படை கடமை என்பதை உணர்ந்து, சட்டம் ஒழுங்கை உடனடியாகச் சீரமைக்கத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in