LATEST NEWS
இதெல்லாம் தேவையா..? “லஞ்சம் கேட்ட போலீஸ்… மறுத்த லாரி டிரைவர்” ஆத்திரத்தில் நடந்த சம்பவம்… கடைசியில் தன் சொந்தப் பணத்தையே நஷ்டஈடாகக் கொடுத்த அதிகாரி..!!
லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய போலீஸ் அதிகாரி ஒருவர், ஓட்டுநர் பணம் தர திட்டவட்டமாக மறுத்ததால் கடும் கோபமடைந்தார். ஆத்திரத்தின் உச்சத்துக்கேன்ற அந்த அதிகாரி, லாரியின் முன் பகுதியில் ஏறி அதன் முன்பக்கக் கண்ணாடியை அடித்து நொறுக்கினார். லஞ்சமும் தராமல் தன் வாகனத்தின் கண்ணாடியும் உடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடையாத அந்த ஓட்டுநர், அடுத்த நொடியே நிலைமையை முற்றிலும் தன் பக்கத்திற்கு சாதகமாக மாற்றினார்.
போலீஸ் அதிகாரி தனக்குச் செய்த அநியாயத்தையும், கண்ணாடியை உடைத்த காட்சிகளையும் தனது செல்போனில் துல்லியமாக வீடியோவாகப் பதிவு செய்தார். பின்னர், அந்த ஆதாரத்தை உயர்மட்ட அதிகாரிகளிடம் காட்டி புகார் அளித்தார். லஞ்சம் கேட்கும் முயற்சியும், அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையும் வீடியோ ஆதாரமாக வெளிவந்ததால் அந்த போலீஸ் அதிகாரியால் எதையும் மறுக்க முடியாமல் போனது.
தன் பதவியைக் காத்துக்கொள்ளவும் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவும் வேறு வழியின்றி, தான் உடைத்த லாரி கண்ணாடியின் முழுச் செலவையும் அந்த அதிகாரியே தன் சொந்தப் பணத்திலிருந்து லாரி ஓட்டுநருக்கு நஷ்டஈடாக வழங்க நேரிட்டது. லஞ்சம் வாங்க வந்த போலீஸ் அதிகாரியே, தன் சொந்தப் பணத்தை இழந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
