சல்யூட் போலீஸ்.. காணாமல் போன 4 வயதுச் சிறுமி.. 45 நிமிடங்களில் நடந்த அதிசயம்.. மக்களை நெகிழ வைத்த சம்பவம்..!!! – cinefeeds
Connect with us

CRIME

சல்யூட் போலீஸ்.. காணாமல் போன 4 வயதுச் சிறுமி.. 45 நிமிடங்களில் நடந்த அதிசயம்.. மக்களை நெகிழ வைத்த சம்பவம்..!!!

Published

on

ஹைதராபாத் அட்டாபூர் பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயதுச் சிறுமி திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், முகமது மெஹபூப் என்பவரது மகளான அபியா பாத்திமா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். அக்கம்பக்கத்தில் நீண்ட நேரம் தேடியும் சிறுமி கிடைக்காததால் பதற்றமடைந்த தந்தை, உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றவுடன் சற்றும் தாமதிக்காமல் களமிறங்கிய காவல்துறையினர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து தேடுதல் வேட்டையை நடத்தினர். காவல்துறையினரின் துரித நடவடிக்கையால், புகார் அளித்த வெறும் 45 நிமிடங்களுக்குள்ளாகவே சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மாயமான குழந்தையை மின்னல் வேகத்தில் மீட்டுக் கொடுத்த காவல்துறையினருக்குச் சிறுமியின் குடும்பத்தினர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in