CRIME
“தண்ணீர் குடித்துவிட்டுப் போங்க அண்ணா…” பாசமாக அழைத்த பெண்ணின் பேச்சை நம்பி வீட்டுக்குள் சென்றவருக்கு நேர்ந்த கொடூரம்.. காவல் நிலையத்தில் கதறிய இளைஞர்.. பரபரப்பு சம்பவம்..!!
கிடலூரில் இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு ஏறிய பெண் ஒருவர், வாகன ஓட்டியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மிரட்டிப் பணத்தைப் பறித்த நூதனச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற நபரிடம் அண்ணன் என்று பாசமாகப் பேசி பைக்கில் லிப்ட் கேட்ட அந்தப் பெண், தனது வீடு வந்ததும் தாகத்திற்குத் தண்ணீர் குடித்துவிட்டுச் செல்லுமாறு அவரை உள்ளே அழைத்துள்ளார்.
அப்பெண்ணின் பேச்சை நம்பி வீட்டிற்குள் சென்ற அந்த நபரை, அங்கிருந்தவர்கள் மிரட்டி அவரது ஆடைகளைக் கழற்றச் செய்து அவரிடமிருந்த பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். “அண்ணன் என்று நம்பி லிப்ட் கொடுத்தேன், தண்ணீர் தருவதாக வீட்டிற்குள் அழைத்து இப்படியொரு காரியம் செய்துவிட்டீர்களே” என்று பாதிக்கப்பட்ட நபர் வேதனையுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
