சாலையில் காத்திருந்த எமன்… இருட்டில் காற்றில் பரந்த பைக் .. தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சாலையில் காத்திருந்த எமன்… இருட்டில் காற்றில் பரந்த பைக் .. தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!

Published

on

நொய்டா மேற்கில் உள்ள பரபரப்பான 130 மீட்டர் சாலையில், எவ்வித எச்சரிக்கை குறியீடுகளோ அல்லது பிரதிபலிப்பான்களோ இல்லாத வேகத்தடையால் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு நேர இருட்டில் வேகத்தடை இருப்பது தெரியாததால், அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் நிலைதடுமாறி அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டது. இதில் வாகன ஓட்டி சாலையில் வெகுதூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.

புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் நடந்த இந்தப் பதைபதைக்க வைக்கும் விபத்து, பின்னால் வந்த காரின் டேஷ்கேமில் பதிவாகி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அகலமான மற்றும் அதிவேகமாக வாகனங்கள் செல்லும் இந்தச் சாலையில், வேகத்தடைக்கு வெள்ளை நிறக் கோடுகளோ, ஒளிரும் ஸ்டிக்கர்களோ அல்லது எச்சரிக்கைப் பலகைகளோ வைக்கப்படாததே விபத்திற்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியத்திற்கு எதிராக உள்ளூர்வாசிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். எதிர்காலத்தில் உயிரிழப்புகளைத் தவிர்க்க அனைத்து வேகத்தடைகளிலும் உடனடியாக வெள்ளை நிறக் குறியீடுகள் மற்றும் பிரதிபலிப்பான்களைப் பொருத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், இந்த விபத்து குறித்து இதுவரை காவல் நிலையத்தில் முறையான புகார் எதுவும் பதிவாகவில்லை என நொய்டா காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in