விராலிமலையில் உச்சகட்ட பரபரப்பு..! “தவெகவுக்கு போய்டாதீங்க…” – அதிமுக கோட்டையில் ரகசிய அட்வைஸ்! விஜயபாஸ்கருக்கு செக் வைக்கும் எடப்பாடி டீம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விராலிமலையில் உச்சகட்ட பரபரப்பு..! “தவெகவுக்கு போய்டாதீங்க…” – அதிமுக கோட்டையில் ரகசிய அட்வைஸ்! விஜயபாஸ்கருக்கு செக் வைக்கும் எடப்பாடி டீம்..!!

Published

on

2011-ம் ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்ததால், விராலிமலைத் தொகுதி அதிமுகவின் வலுவான கோட்டையாக மாறியிருந்தது. ஆனால், அண்மையில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததால், தற்போது அத்தொகுதி காலியாக உள்ளது.

இந்நிலையில், விராலிமலைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெக சார்பில் மீண்டும் சி. விஜயபாஸ்கரே வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அதிமுகவின் கோட்டையாக இருந்த விராலிமலையைத் தக்கவைத்துக் கொள்வது மற்றும் இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இழுக்க சி. விஜயபாஸ்கர் காய் நகர்த்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, அவரது அரசியல் வலைக்குள் அதிமுகவினர் யாரும் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்குமாறும், கட்சியின் வெற்றிக்காக ஒன்றிணைந்து பணியாற்றுமாறும் தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in