LATEST NEWS
சின்ன விஷயத்துக்கு இப்படியா..? “அந்த போன் தான் வேணும்..” அடம் பிடித்த மகள்… தந்தை மறுத்ததால் மாடியில் 12-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..! கதறித் துடிக்கும் குடும்பம்..!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்டம் பபீனா பகுதியில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவி மெஹக் சாஹு, சிறு விஷயத்தில் ஏற்பட்ட மனவருத்தத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவின் புகைப்படங்களை எடுப்பதற்காகத் தன் தந்தையிடம் அவரது மொபைல் போனை மாணவி கேட்டுள்ளார்.
ஆனால் அவரது தந்தை, அந்த போனுக்குப் பதிலாக வேறு ஒரு மொபைல் போனை எடுத்துச் செல்லுமாறு அவரிடம் கூறியுள்ளார். எனினும் அதே மொபைல் போனைத் தருமாறு அடம் பிடித்த அவர், தந்தை மறுத்ததால் கடுமையாகக் கோபித்துக்கொண்டு பள்ளிக்குச் செல்லாமல் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறைக்குச் சென்று படுத்துக்கொண்டார்.
பின்னர் மாலை நேரத்தில் தாய் அவரை அழைக்கச் சென்றபோது, அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினரால் அதற்குள் அவரை காப்பாற்ற முடியவில்லை, அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பபீனா காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
