“கவலைப்படாதீர்கள்… விரைவில் திமுக ஆட்சி உதயம் ஆகும்…” திருமண விழாவில் மு.க.ஸ்டாலினின் அனல் பறந்த பேச்சு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கவலைப்படாதீர்கள்… விரைவில் திமுக ஆட்சி உதயம் ஆகும்…” திருமண விழாவில் மு.க.ஸ்டாலினின் அனல் பறந்த பேச்சு..!!

Published

on

சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற கே.என். நேருவின் சகோதரர் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திருச்சி மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்றி காட்டியவர் கே.என். நேரு என்றும், நேரு கோபக்காரர் என்றாலும் அந்த கோபத்தில் அன்பும் குணமும் இருக்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும், கே.என். நேரு அமைச்சராக இல்லாவிட்டாலும் கூட, திருச்சி மாவட்டத்தில் அவர் இன்றும் அமைச்சராகத்தான் திகழ்வதாக புகழாரம் சூட்டினார்.

தற்போதைய அரசியல் சூழல் குறித்து விமர்சித்த அவர், தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களாக ஆட்சி நடக்கவில்லை, வெறும் காட்சிதான் நடக்கிறது என்று கடுமையாக சாடினார். தவெக தலைமையிலான மோசமான ஆட்சியின் காரணமாக கவலைப்பட வேண்டாம் என்றும், தமிழ்நாட்டில் விரைவில் திமுக ஆட்சி உதயமாகும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். மேலும், இப்போதும் நான்தான் முதலமைச்சர் என்று கூறுவதற்கு வெட்கமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள்தான் தொடர்ந்து நடந்து வருவதாகவும், அவ்வாறு குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலோர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும், திருச்சி கிழக்கில் விரைவில் இடைத்தேர்தல் வரப்போவதாகவும் அவர் தனது உரையின் போது குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in