யமுனையில் மிதக்கும் நச்சு நுரை… வெடித்தது அரசியல் போர்! “இது AI இல்ல பாஸ்” என கலாய்த்த ஆம் ஆத்மிக்கு பாஜக கொடுத்த அதிரடி பதிலடி …!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யமுனையில் மிதக்கும் நச்சு நுரை… வெடித்தது அரசியல் போர்! “இது AI இல்ல பாஸ்” என கலாய்த்த ஆம் ஆத்மிக்கு பாஜக கொடுத்த அதிரடி பதிலடி …!!

Published

on

டெல்லியில் சத் பூஜை கொண்டாட்டங்களின் போது, யமுனை நதியின் மேற்பரப்பில் நச்சு நுரை மிதக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ஆம் ஆத்மி கட்சி பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது.

யமுனை நதியைத் தூய்மைப்படுத்துவதாகக் கூறிவிட்டு, தற்போதைய பாஜக அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. நச்சு நுரைகளுக்கு நடுவேயும் பூர்வாஞ்சல் பக்தர்கள் சத் பூஜையைக் கொண்டாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி தலைவர்கள், “இது செயற்கை நுண்ணறிவு உருவாக்கம் அல்ல, சத் பூஜையின் போதுள்ள யமுனையின் எதார்த்தமான நிலை” என்று கூறி வீடியோக்களைப் பகிர்ந்துள்ளனர்.

Advertisement
  • மறுபுறம், யமுனை நதி முன்பு இருந்ததை விட தற்போது கணிசமாகத் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் சத் பூஜை மிகப்பிரமாண்டமான முறையில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியின் முறையீடுகளால்தான் நதியின் தற்போதைய நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

இந்த விவகாரம் தற்போது டெல்லி அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in