LATEST NEWS
“அவர் முன்னாடி மாதிரி இல்ல… நான் மட்டும் தான் அவர் மீது உயிராக இருக்கேன்…” குழந்தையைக் கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை.. டைரி பக்கங்களில் மறைந்திருந்த அந்த பகீர் ரகசியம்..!!
ஐதராபாத் கே.பி.எச்.பி. பகுதியில் பெற்ற குழந்தையைக் கொன்றுவிட்டுத் தம்பதியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன்-மனைவி இடையே நிலவிய கருத்து வேறுபாடு மற்றும் காதல் குறைந்துவிட்டதாகக் கூறப்படும் சோகமான சூழ்நிலையில் இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவ இடத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், உயிரிழந்த சமதா என்பவரின் டைரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
வங்காள மொழியில் எழுதப்பட்டிருந்த அந்தத் டைரியைப் போலீசாரும் உறவினர்களும் இணைந்து படித்துப் பார்த்தபோது, அதில் சமதா தனது கணவர் மீது கொண்டுள்ள ஆழ்ந்த காதல் மற்றும் அவர் தன்னை முன்பு போல் நேசிக்கவில்லை என்ற வேதனை மிகுந்த வரிகள் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. கணவன் தன் மீது எந்தவித அக்கறையும் செலுத்துவதில்லை என்றும், தான் மட்டுமே இன்னும் அவர் மீது உயிராக இருப்பதாகவும் அந்த டைரி குறிப்புகளில் சமதா மிகுந்த மனவேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தம்பதியருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மனக்கசப்பும், கணவனின் அலட்சியப் போக்கும் காரணமாகவே இத்தகைய விபரீத முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பெற்ற குழந்தையைப் பலிகொடுத்துவிட்டுத் தம்பதியரே தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
