LATEST NEWS
என்ன தாத்தா இதெல்லாம்..? 77 வயதில் திருட்டுத்தனமாக முதியவர் செய்த் காரியம்.. ஸ்கேன் ரிப்போர்ட்டால் உடைந்தது ரகசியம்… மருத்துவர்களுக்கே ஷாக்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த 77 வயதான கங்கா பாக்ஷ் என்ற முதியவருக்குத் திடீரெனத் தொண்டையில் கடுமையான வலி ஏற்பட்டு, தண்ணீர் கூட விழுங்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, உணவுக்குழாயில் கூர்மையான பொருள் ஒன்று சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, மருத்துவர்கள் எண்டோஸ்கோபி (Endoscopy) சிகிச்சை மூலம் அந்தப் பொருளைப் பத்திரமாக வெளியே எடுத்தனர். வெளியே எடுக்கப்பட்ட பொருளைப் பார்த்த மருத்துவர்கள், அது ஒரு மீனின் முள் என்பதைக் கண்டுபிடித்துக் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.
ஆனால், வீட்டில் உள்ளவர்களிடம் தான் ஒரு சுத்த சைவம் (Pure Vegetarian) என்று கூறிவந்த அந்தத் தாத்தா, இந்தச் சம்பவத்தால் வசமாகச் சிக்கிக்கொண்டார். வேறு வழியின்றி, குடும்பத்தினருக்குத் தெரியாமல் தான் திருட்டுத்தனமாக மீன் சாப்பிட்டு வந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சுவாரசியமான சம்பவம் அப்பகுதியில் கலகலப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
