LATEST NEWS
“அப்பா மடியில் அம்மா…” கேலி செய்த பாஜக தலைவர்களுக்கு சிவன் – பார்வதி சிலையைக் காட்டி ராகுல் கொடுத்த நச் பதிலடி..!!”
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது பெற்றோர் குறித்த பேச்சுக்கு பாஜக-வினர் கிண்டல் செய்திருந்த நிலையில், சிவன்- பார்வதி இணைந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தனது தாயார் சோனியா காந்தியின் `Belonging: A Journey of Love’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல் காந்தி, நாங்கள் குடும்பமாக சாப்பிடும்போது தனது தந்தை ராஜீவ் காந்தியின் மடியில் தனது தாயார் சோனியா காந்தி அமர்ந்திருப்பார் என்று தனது குழந்தைப் பருவ நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள் அவரை விமர்சித்தனர். குறிப்பாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ராகுலின் பேச்சைக் கிண்டல் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களின் மனதில் பயம், கோபம், வெறுப்பு ஆகியவை அன்பை உணரவும் வெளிப்படுத்தவும் தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், உண்மையான இந்துவாக அவர்களை அந்த வெறுப்பிலிருந்து விடுவித்து அன்பின் மகிழ்ச்சியை உணரச் செய்வது தனது கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனுடன் சிவன் மற்றும் பார்வதி தேவி அமர்ந்திருக்கும் சிற்பத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்து, ‘சத்யம் சிவம் சுந்தரம்’ என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். தனது தந்தையின் மடியில் தாய் சோனியா காந்தி அமர்ந்திருந்ததை, சிவன் மடியில் பார்வதி அமர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி அவர் இந்த பதிலடியைக் கொடுத்துள்ளார்.
