LATEST NEWS
அய்யோ கடவுளே..! திருமணமாகி 10 வருடம் கழித்து உண்டான கர்ப்பம்.. மனமுடைந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லையே உலுக்கிய துயரச் சம்பவம்..!!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே, திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு உண்டான கர்ப்பம் எதிர்பாராத விதமாகக் கலைந்ததால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை அருகே உள்ள காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் (35). இவருக்கும், வீலிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரின் மகள் அமுதாவுக்கும் (29) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், எதிர்பாராத விதமாக அமுதாவின் வயிற்றில் இருந்த கரு கலைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இடிந்து போன அமுதா, மிகுந்த மன வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அமுதா விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அமுதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
