LATEST NEWS
திமுக கூடாரத்தில் ஷாக்..! தவெக பக்கம் தாவத் தயாரான முக்கியப் புள்ளி..? ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு முடிவு.. பெரும் பரபரப்பு…!!
திமுக தலைமையின் அறிவிப்பின்படி, வில்லிவாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் துரை வீரமணி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அயப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திருவள்ளூர் மாவட்ட திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
துரை வீரமணி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவது தொடர்பாக, கடந்த சில நாள்களுக்கு முன்னர் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. இதனை அறிந்த திமுக தலைமை, உடனடியாக அவரைக் கட்சிப் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவைப் போலவே தற்போது திமுகவிலும் பல முக்கிய நிர்வாகிகள் தவெக பக்கம் தாவும் மனநிலையில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, முக்கியக் கட்சிகளின் நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளுக்குச் செல்வது தமிழக அரசியலில் புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.
