CRIME
“ஐயோ.. இது என்ன கொடுமை.. ” கடைக்குள்ளேயே விபரீத முடிவு எடுத்த தையல் கலைஞர்.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் ஜக்தியால் நகரில் உள்ள தீன்கானி சந்திப்பு அருகே ‘ஸ்ரீராம் டெய்லர்ஸ்’ என்ற பெயரில் தையல் கடை நடத்தி வந்தவர் சங்கர் (42). இவர் தொழில் நஷ்டம் மற்றும் அதிகரித்து வந்த கடன் சுமையைத் தாங்க முடியாமல் கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக, நேற்று தனது தையல் கடைக்குள்ளேயே சங்கர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தச் சோகச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சங்கரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ஜக்தியால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சங்கருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கடன் தொல்லையால் தையல் கலைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து முழுமையான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
