CINEMA
“அடப்பாவமே.. உயிரிழந்த தொழிலாளியின் உடலை ஓரமாக வைத்து..” திரையுலகின் இருண்ட பக்கத்தைத் தோலுரித்த பிரபல நடிகை.. பகீர் சம்பவம்..!!
திரைத்துறையில் நிலவும் மனிதநேயமற்ற போக்கு குறித்துப் பிரபல நடிகை உபாசனா சிங் பகிர்ந்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்புத் தளம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த லைட்டிங் தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர், எதிர்பாராத விதமாக உயரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகும் படப்பிடிப்பை நிறுத்தாமல், உயிரிழந்தவரின் உடலை ஒரு ஓரமாக நகர்த்தி வைத்துவிட்டு மீண்டும் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்தியதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று, மற்றொரு நிகழ்ச்சியில் பசியின் காரணமாக மயங்கி விழுந்த போட்டியாளர் ஒருவருக்கு உடனடியாக முதலுதவி அளித்துக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, அந்தக் காட்சியையும் படம்பிடிக்கவே தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டியதாகவும் உபாசனா சிங் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். சக மனிதர்களின் உயிரையும் உணர்வுகளையும் விடப் படப்பிடிப்பும், விளம்பரமும், வணிக நோக்கமுமே முக்கியமாகிவிட்டதைக் கண்டு மனம் நொந்துபோன அவர், “மனிதநேயம் எங்கே போனது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த வெளிப்படையான கருத்து திரையுலகில் பெரும் அதிர்வலைகளையும், தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
