“எங்க வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டாங்க” – திருமணத்திற்கு மறுத்த காதலன்… அடுத்த நொடியே 9-வது மாடியிலிருந்து குதித்த இளம்பெண் தற்கொ**..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“எங்க வீட்டில் ஒத்துக்கொள்ள மாட்டாங்க” – திருமணத்திற்கு மறுத்த காதலன்… அடுத்த நொடியே 9-வது மாடியிலிருந்து குதித்த இளம்பெண் தற்கொ**..!!

Published

on

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி முத்துக்குமாரின் மகனான வருண் பாலாஜி (33), சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் வசித்து வந்தார். இவர் அதே மாவட்டத்தைச் சேர்ந்த பி.இ பட்டதாரியான பர்வீன் (24) என்ற இளம்பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வருண் பாலாஜி தன்னுடன் பேசுவதைக் குறைத்து, செல்போன் அழைப்புகளையும் தவிர்த்ததால் மனமுடைந்த பர்வீன், நேற்று இரவு சோழிங்கநல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார்.

வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதால் உடனடியாக வந்து பெண் கேட்குமாறு பர்வீன் வலியுறுத்தியபோது, “நீ முஸ்லிம் என்பதால் எங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; திருமணம் செய்துகொள்வது கஷ்டம்” என வருண் பாலாஜி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த பர்வீன் வீட்டிலிருந்த நாற்காலியை வெளியே எடுத்து வந்து அதன் மீது ஏறி, காதலன் கண்முன்னே 9-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த செம்மஞ்சேரி போலீசார், பர்வீனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இளம்பெண் தற்கொலைக்குத் தூண்டியதாகக் காதலன் வருண் பாலாஜியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in